உள்நாடு

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு ஆலோசனை வகுப்புகள்

(UTV | கொழும்பு) – கடந்த வாரத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த வீதி ஒழுங்கை நடைமுறையினை மேலும் விஸ்த்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கொழும்பின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு நாளை (21) முதல் ஆலோசனை வழங்கும் வகுப்புகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வீதி ஒழுங்குவிதிகளை மீறும் சாரதிகள், குறித்த வகுப்புகளுக்கு சமூகமளிப்பது கட்டாயமானது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோரை அடையாளம் காண்பதற்காக விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீதி ஒழுங்கை நடைமுறையினை நாளை முதல் கொழும்பு மாவட்டத்தில் முழுமையான அமுல்ப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் விளக்கமறியலில்

இதுவரையில் 2,646 பூரண குணம்

இன்று முக்கியமான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.