உள்நாடு

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை

(UTV | நாவலப்பிட்டி) –  நாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் இன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியினூடான போக்குவரத்து தடைபட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் மூன்று மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது.

அத்தோடு மின் இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத மதுபான உற்பத்தி : சந்தேக நபர் கைது

பல நாடுகளுடன் ஜனாதிபதி சாதகமான பேச்சு – அனில் ஜாசிங்க.

கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஜப்பானிய அரசு நிதி உதவி