உள்நாடு

தொடரும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று(18) உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங், லைபீரியா, பஹ்ரைன், ஓமான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,281 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,060 ஆகவும், 208 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பாடில்லை – சுமந்திரன்

ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு