வணிகம்

மத்தள விமான நிலையத்தினூடாக பயணிப்போருக்கு சலுகை

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக வேலைவாய்ப்பு நிமித்தம் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பணியகத்தின் தகவல்களின்படி, தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வோரில் 20 சதவீதமானோர் பேர் மத்தள விமான நிலையத்‍தை அண்மித்த காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, அம்பாறை, இரத்தினபுரி,மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜப்பானில் இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி…

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு