(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் விசேட ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒன்றிணைந்து இந்த ஆலோசனைகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விளையாட்டு நடவடிக்கையின் போது கைகளை கழுவுதல் மற்றும் சுகாதார முறைப்படி உணவு உட்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை முன்னெடுத்தல் போன்ற அடிப்படை ஆலோசனைகளுக்கு மேலதிகமாக விளையாட்டு மைதானங்களில் பிரவேசிப்போருக்கு போதுமான சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள அதிபர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு தெளிவுபடுத்துவதற்கு தற்பொழுது அனைத்து மாகாண கல்வி அதிகாரிகள் விளையாட்டு சங்கங்களின் முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பட்டுள்ளது.