உலகம்

ரஷ்யாவின் தடுப்பூசியாலும் பக்க விளைவுகள்

(UTV | ரஷ்யா) – ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை தொடர்ந்து ரஷ்யா தயாரித்த கொரோனா தடுப்பூசியும் பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளமையானது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தயாரித்த தடுப்பூசி இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தன்னார்வலர்கள் சிலருக்கு பக்க விளைவுகள் உண்டானதால் சோதனை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் சோதனை பணிகள் ஏறத்தாழ முடித்து மக்களுக்கு விநியோகிக்க உள்ள நிலையில், அந்த தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட தன்னார்வலர்களில் 14% நபர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா சுகாதாரத்துறை அளித்த விளக்கத்தில் மூன்றாம் கட்ட சோதனையாக 40,000 பேரிடம் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அதில் முதலாவதாக 300 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு தசை வலி, சோர்வு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் விரைவில் குணமடைந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கின்றது

உலகளவில் 46 இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்

உலகளவில் 7 இலட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை