(UTV | இந்தியா) – இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 மில்லியனை கடந்துள்ளது.
இதுவரையில் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82,066 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், புதிய நோயாளிகள் மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை தற்போது மிக அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,020,359 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,283 பேர் மரணம் அடைந்துள்ளதுடன், இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82,091ஆக உயர்ந்துள்ளது.