கிசு கிசு

முகக்கவசம் அணியாதோர் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்

(UTV | கொழும்பு) – முகக்கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு நூதன தண்டனை வழங்கும் சம்பவம் இந்தோனேசியாவில் பதிவாகியுள்ளது.

முகக்கவசம் அணியாதோர் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்ட வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் முக கவசம் அணியாமல் பொலிஸாரிடம் பிடிபடும் நபர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

மின்சார கட்டணம் பாரியளவில் உயரும் சாத்தியம்

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்? இதுதான் காரணமா?

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை வெளிநாடுகளுக்கு செல்லத் தடை