உள்நாடு

நாளை முதல் 2,000 ரூபாய் அபராதம்

(UTV | கொழும்பு) – கொழும்பு நகரில் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் வீதி ஒழுங்கு விதிமுறையை மீறும் சாரதிகளிடம் நாளை(17) முதல் 2,000 ரூபாய் அபராதம் அறவிடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்து முன்னுரிமைப் பாதை சட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒழுங்கையின் ஊடாகவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் பயணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்களுக்கு விசேட பேரூந்து சேவை

ரஷ்ய அரச செய்தி நிறுவனத்திடமிருந்தான அறிவிப்பு