(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(16) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குறித்த குழுவின் அறிக்கை, நேற்றைய தினம் அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.