(UTV | கொழும்பு) – கொவிட்-19 வைரஸ் தொற்றானது வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் சமூகத்திற்குள் பரவவில்லை என்ற போதிலும் அது நாட்டினுள் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா நோய் தொற்றியுள்ளது.
இந்நிலைமையின் கீழ் இலங்கையினுள் இதுவரையில் சமூகத்திற்குள் கொரோனா நோய் தொற்றவில்லை என்ற போதிலும் எங்கள் நாட்டில் கொரோனா தொற்றும் ஆபத்து குறையவில்லை.
ஏதாவது ஒரு வகையில் நாங்கள் தவறவிட்ட அல்லது எங்களால் தவறவிடப்பட்ட நோயாளிகள் சமூகத்திற்குள் இருந்தால் கொரோனா கொத்தணியாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இதனால் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். கொரோனா நோய்க்கு எதிராக செயற்படுத்துவதற்கும் பரவலை தடுப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் இதுவரையில் 3,263 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, குறித்த தொற்றில் இருந்து 3,016 பேர் மீண்டுள்ளனர். மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.