உலகம்

இஸ்ரேலில் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு

(UTV |  இஸ்ரேல்) – மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலிலும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

எனினும், கடந்த மே மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. ஊரடங்கு தளர்வுகளை அவசர கதியில் பெஞ்சமின் நேதன்யாகூ அரசு அறிவிப்பதாக அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இஸ்ரேலில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, 3 வாரங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ அறிவித்தார்.

அதாவது அக்டோபர் 9 ஆம் திகதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் எனவும் மக்கள் தங்கள் இருக்கும் இடத்தை விட்டு 500 மீட்டருக்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படாது எனவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இஸ்ரேல் 24 வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.55 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு 1,119 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 1.14 இலட்சத்தைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதினின் அறிவிப்பினால் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்ய ஆண்கள்

காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை – ஆராய்கின்றது அமெரிக்கா.

நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

editor