(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் மேற்கு கடலோர மாகாணங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீயால் 30 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதுடன், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி உள்ளன.
ஓரிகன், கலிஃபோர்னியா மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில், கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட காட்டுத்தீயினால் பல இலட்ச ஏக்கர் நிலங்கள் அழிந்துவிட்டன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
கலிஃபோர்னியாவில் வடக்கு பகுதியில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மோசமான ஒரு காட்டுத்தீ சம்பவமாக இது உள்ளது.