உள்நாடு

உண்ணாவிரத போராட்டம் 4வது நாளாகவும் தொடர்கிறது

(UTV | காலி) – போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளான பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெஸி மற்றும் வெலே சுதா உள்ளிட்ட கைதிகள் குழு முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று(12) நான்காவது நாளாகவும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கஞ்சிபானை இம்ரான் மீண்டும் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உணவு தவிர்ப்பு போராட்டம் காரணமாக ஏற்பட்ட நோய் நிலைமை அடுத்து அவர் பூஸா கடற்படை வைத்தியசாலையில் நேற்று(11) அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக 40 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் அவர்களில் 13 பேர் தற்போது போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

உறவினர்களுடன் தொலைப்பேசியில் உரையாட சந்தர்ப்பமளிக்கப்படாமை, கைதிகளைப் பார்வையிட வரும் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்துதல், சிறைச்சாலை வளாகத்தில் சோதனை மேற்கொள்ளல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறைச் சாலைகள் திணைக்கள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

கட்டான கொள்ளைச் சம்பவம் : 05 பேர் கைது

விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிப்பு

“மின் பாவனையை குறைக்க மாற்று வழிகளை அறிவிக்கவும்”