உலகம்

பெய்ரூட் தீ விபத்து : நகரை விட்டு வெளியேறும் மக்கள்

(UTV | லெபனான் )- கடந்த மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுக கிடங்கில் மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் அதே பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்முறை துறைமுகத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் வைத்திருந்த கிடங்கில் திடீரென தீ பற்றியது. அங்கு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் இராணுவ அதிகாரிகளும் போராடி வருகின்றனர்.

ஆனால் இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தபோதும், அதனால் சமாதானம் அடையாத பலர், தலைநகரை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

Related posts

ட்ரம்ப் இனது ‘TRUTH SOCIAL’

சர்வதேசம் எதிர்பார்த்த முதல் சந்திப்பு இன்று

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தின அனுஷ்டிப்பு