வணிகம்

தரம் சிறந்த கிரிஸ்புரோ தயாரிப்புக்கள் வெற்றிகரமாக வளைகுடா பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோ நிறுவனம் வளைகுடா பிராந்தியத்திற்காக முதலாவது ஏற்றுமதியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்தினால் கிடைத்த ஆடர்களுக்கு அமைய குளிரூட்டப்பட்ட 30 மெற்றிக் தொன் கோழி இறைச்சி தொகையை ஓமானில் உள்ள அல் ஹமாதி டிரேங்கிற்கு அண்மையில் ஏற்றுமதி செய்துள்ளது.

கிரிஸ்புரோவினால் வளைகுடா பிராந்தியத்திற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி தொடர்பாக கருத்து தெரிவித்த கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ் செலர், ‘கொவிட் 19 தொற்றுநோயின் பின்னர் நாடு சீரடைந்து வருகின்ற நிலையில் எமக்கு மிக விரைவாக அதற்கு ஏற்றாற்போல் மாற்றமடைய வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் நாம் எதிர்கொண்ட சவால்கள் காரணமாக இந்த நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதுடன் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக ஒட்டுமொத்த தேசிய உற்பத்திக்கு சமமாக எமது ஏற்றுமதியின் அளவு அதிகரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் சிறந்தவிதத்தில் மற்றும் போஷாக்கு நிறைந்த எமது கிரிஸ்புரோ தயாரிப்புக்களை வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கு கிடைத்தமையானது நிறுவனம் என்ற ரீதியிலும் நாடு என்ற ரீதியிலும் நாம் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக கருத முடியும்’ என
தெரிவித்தார்.

தமது ஏற்றுமதி விதிமுறைகளுக்கு கவனம் செலுத்தி இதற்கு முன்னர் மாலைதீவிற்கு தமது சிறந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்த கிரிஸ்புரோ, வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்திற்கு தமது ஏற்றுமதிகளை விஸ்தரிப்பதற்காக நடவடிக்கை எடுத்தமையினால் 2.8 மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதி சந்தைக்காக இலங்கையின் சிறந்த கோழி இறைச்சி உற்பத்திக்கு வழியை திறந்து வைத்துள்ளது.

முழுமையாக நிறுவனம் என்ற ரீதியில் கிரிஸ்புரோ இந்த நாட்டில் கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்க்கையை பலப்படுத்துவது குறித்து தமது சமூக பொறுப்புணர்வு வேலைத்திட்டங்கள் அனைத்தையும் நிர்மாணித்துள்ளது. தமது நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வு வேலைத்திட்டத்திற்குள் திரிசவிய, பிரஜா அருண, கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நேரடி பங்களிப்பை பெற்றுக்கொடுப்பதுடன் மத்திய மாகாணம், வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் சோளம் மற்றும் சிறிய கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பெரும்பாலானோருக்கு இந்த திட்டத்தின் ஊடாக சந்தை மற்றும் புதிய தொழில்நுட்பம் மட்டுமன்றி வர்த்தக அறிவினையும் பெற்றுக் கொடுக்க கிரிஸ்புரோ நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச மட்டத்தில் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடிந்த போதிலும் ஒருவராலும் கவனிக்கப்படாத அல்லது ஒத்துழைப்பு வழங்கப்படாத விளையாட்டு வீர வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே Crysbro Next Champ திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைவதுடன் நாடு முழுவதிலும் பரந்து வாழும் திறமையான இளம் விளையாட்டு வீர வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான வழிநடத்தல்கள், பயிற்சிகள், உணவு முறைகள் போன்ற விடயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கி அதன் மூலம் அவர்கள் தேசிய மட்டத்தில் உயர்த்துவதே இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

‘சிசு திரிய’ஊடாக பாடசாலை மாணவ மானவிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்குதல் மற்றும் தொழில் கல்வியை பெற்ற மாணவர்கள் பலருக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அத்துடன் பிரஜா அருண மூலம் 34 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 80 வீடுகள் திருத்தப்பட்டுள்ளன. கிரிஸ்புரோ ஹரித சத்கார வேலைத்திட்டத்தின் மூலம் 5000 மரக்கன்றுகள் நாட்டுவதன் ஊடாக கிரிஸ்புரோ சுற்றாடலை பாதுகாக்க விரும்பும் நிறுவனமென முழு உலகிற்கும் அடையாளப்படுத்தியுள்ளது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ‘பண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை’ என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

Related posts

Elon Muskயின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு இலங்கைக்கு!

இறப்பருக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் வரவேற்பு

மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்