உலகம்

இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா

(UTV | இந்தியா) – சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 80 இலட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,029,782 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 20,106,526 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 908,051 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 4,462,965 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 65,48,737
இந்தியா – 43,70,129
பிரேசில் – 41,99,332
ரஷியா – 10,41,007

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்