உள்நாடு

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3147 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 5 பேருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த கடற்படை அதிகாரி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 946 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 189 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

UPDATE : ஜனாதிபதி வந்த வழியே வெளியேறினார்

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]

கட்சிக்கோ – தலைமைக்கோ எழுதாதீர் : சமுகத்துக்காக இனி எழுதுங்கள் – ரிஷாத்