வணிகம்

விவசாய உபகரணங்களுக்காக விசேட லீசிங் கொடுப்பனவை வழங்க பிரவுன்ஸ் நிறுவனத்துடன் இணையும் HNB

(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி தனியார் பிரிவு வங்கியான HNB, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன துறையினரின் பயன்பாட்டிற்காக எடுக்கப்படும் விவசாய இயந்திர உபகரணங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான நன்மைகளுடன் கூடிய அவர்களால் செலுத்தக் கூடிய விலைக்கு விசேட லீசிங் பெகேஜ் ஒன்றை வழங்குவதற்காக Brown & Company PLC உடன் கைகோர்த்துள்ளது.

இந்த கூட்டணியின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு TAFE & Massey Ferguson டிரக்டர், Yanmar World & Sumo Branded combine ஹாவெஸ்டர் மற்றும் Crop dusters இயந்திரங்களுக்காக விசேட கழிவு மற்றும் சலுகைகளையும் வழங்குகிறது. HNBஇன் தனியார் நிதி சேவைகள் பிரதானி, காஞ்சன கருணாகம மற்றும் பிரன்வுன்ஸ் அக்ரிகல்சர்ஸின் பொது முகாமையாளர் சஞ்ஜேய் நிஸ்ஸங்க ஆகியோர் இந்த கூட்டணியை பலப்படுத்துவதற்காக Browns TAFEஇன் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“நாம் இந்த நாட்டின் ஆசீர்வாதமாக பரந்து காணப்படும் இயற்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கு தரமான வாகனங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இருக்க வேண்டியது அவசியம். பிரவுன்ஸ் நிறுவனத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்த கூட்டணியின் மூலம் எமது நம்பிக்கையை வென்ற வாடிக்கையாளர்கள் அவர்களது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தங்களால் செலுத்தக் மலிவு விலை, வட்டி விகிதம் மற்றும் சேவைகளை பெற்றுக் கொடுக்க முடியுமென நாம் எதிர்பார்த்துள்ளோம்..” என HNBஇன் தனிப்பட்ட நிதி சேவைகள் பிரதானி, காஞ்சன கருணாகம தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணியின் மூலம் Massey Ferguson & TAFE இலச்சினையுடைய விவசாய இயந்திர உபகரணங்களுக்காக விசேட கழிவு HNB லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் வாகன உற்பத்தி, வாகன சரிபார்க்கும் வசதிகள், உதிரிப்பாகங்கள், டயர் மற்றும் பெற்றறிகளுக்காக விசேட கழிவுகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய HNB Prestige Prime அட்டை வழங்கப்படுவதுடன் இந்த கடன் அட்டைக்கு முதல் வருடத்தில், வருடாந்திர கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

145 வருடங்களுக்கு மேலான நன்மதிப்புள்ள வரலாற்றைக் கொண்ட, பிரவுன்ஸ் நிறுவனம் சிறந்த தரத்திலுள்ள இயந்திர உபகரணங்கள் மட்டுமன்றி ஒப்பிட முடியாத விற்பனைக்கு பின்னரான சேவைகளை வழங்கி துறையில் நம்பிக்கையான சேவை வழங்குனர் என்ற இடத்தைப் பெற்றுள்ளது. 1952இல் பிரவுன்ஸ் அக்ரிகல்சர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வாத விவாதங்களுடன் துறையின் வர்த்தக முன்னோடிகளான நாம் எப்பொழுதும் வாடிக்கையாளர்களுடன் உள்ள எமது உறவினை மிகவும் பெறுமதி வாய்ந்ததாக கருதுகின்றோம்.

நாம் HNB உடன் ஏற்படுத்திக் கொண்ட இந்த கூட்டணியின் ஊடாக மலிவான லீசிங் தீர்வு மற்றும் ஏனைய சலுகைகள் பலவற்றை பெற்றுக் கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நாம் நம்புகின்றோம்..” என பிரவுன்ஸ் அக்ரிகல்சர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சஞ்ஜய நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார்.

மூலோபாய தீர்வுகளை வழங்குபவரான பிரவுன்ஸ் நிறுவனம் எப்பொழுதும் சந்தைத் தேவைகளைபுரிந்து கொண்டு அதன்படி தமது உற்பத்தி குழுமத்தை விஸ்தரிக்கின்றது. அதன்படி தற்போது உச்ச அளவு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட நவீன விடயங்களுடன் கூடிய பிரிவான உற்பத்தி பரப்பினை தேர்ந்தெடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

பிரவுன்ஸ் பி.எல்.சி. நிறுவனம் அனைத்து டிரக்டர் மாதிரிகளுக்கும் இலவச பதிவு, மற்றும் வீட்டு வாசலுக்கே வந்து மேற்கொள்ளும் நான்கு சேவைகளை விளம்பர ஊக்குவிப்பு காலப்பகுதியின் போது வழங்கும். Massey Ferguson டிரக்டர்களுக்காக 12 மாதங்கள் அல்லது 1000 மணித்தியால உத்தரவாதமும் TAFE டிரக்டர்களுக்கு 24 மாதங்கள் அல்லது 2000 மணித்தியால உத்தரவாதமும் பெற்றுக் கொடுக்கின்றது.

(இடமிருந்து: பிரவுன்ஸ் அக்ரிகல்சரின் நடவடிக்கைகள் சேவை முகாமையாளர், என்டன் பெரேரா, பிரவுன்ஸ் அக்ரிகல்சரின் வர்த்தக மேம்பாட்டு முகாமையாளர், ச்சானக்க சந்திரசேகர, பிரவுன்ஸ் அக்ரிகல்சரின் பிரதி பொது முகாமையாளர் நியாஸ் அஹமட், பிரவுன்ஸ் அக்ரிகல்சரின் பொது முகாமையாளர் சன்ஜய நிஷ்ஷங்க, HNBஇன் தனியார் நிதி சேவைகள் பிரதானி, காஞ்சன கருணாகம, HNBஇன் லீசிங் தொடர்பான சிரேஷ்ட முகாமையாளர் நிலுக அமரசிங்க, HNBஇன் லீசிங் தொடர்பான துணை முகாமையாளர் ரொஷான் டி சில்வா மற்றும் HNBஇன் வர்த்தக மேம்பாட்டு நிறுவேற்று அதிகாரி (HNB Leasing), மஹேஷ் ரத்நாயக்க ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.

Related posts

புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இறக்குமதி பால்மாவுக்கும் விலைச் சூத்திரம்

மிளகு இறக்குமதி நிறுத்தம்