(UTV | ரஷ்யா) – ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி, கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
44 வயதாகும் ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் நவால்னி, நோவிசோக் எனப்பபடும் நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய இரசாயன தாக்குதலுக்கு ஆளானதாக ஜெர்மன் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோமா நிலையில் இருந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் என்ற நகரத்திலிருந்து மொஸ்கோவுக்கு திரும்பும்போது, விமானத்தில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது உடலில் விசம் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.