உலகம்

ஜப்பானை தாக்கும் ஹாய்ஷென் – 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

(UTV | ஜப்பான்) – ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி காரணமாக 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹாய்ஷென் சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ. இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீ. வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்து 8.1 இலட்சம் மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஜப்பானிலுள்ள பிற 10 மாகாணங்களிலும் உள்ள 55 இலட்சம் மக்களையும் வேறு பகுதிகளுக்கு வெளியேறி செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது.

Related posts

லெபனானில் இஸ்ரேல் விமான தாக்குதல் – முக்கிய தளபதி பலி

அமெரிக்க அதிபரின் சகோதரர் காலமானார்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் மோதல்