உள்நாடு

MT New Diamond தொடர்பில் ஆய்வு செய்ய விசேட குழு

(UTV | கொழும்பு) – கிழக்கு கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் (MT NEW DIAMOND) கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கப்பலின் தற்போதை நிலைமை, எதிர்வரும் நாட்களில் ஏதேனும் வெடிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பில் குறித்த குழு ஆய்வு செய்யவுள்ளனர்.

குறித்த கப்பலுக்குரிய நிறுவனத்தினால் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவில் மீட்பு குழுவினர், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்குகின்றனர்.

கிழக்கு கடற்பரப்பில் MT NEW DIAMOND எண்ணைக்கப்பலில் ஏற்பட்டிருந்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நேற்று(05) இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

இம்மாதம் 03ம் திகதி எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் 2 இலட்சத்து 70 ஆயிரம் டன் மசகு எண்ணெயுடன் பயணித்த போது கிழக்கு கடற்பரப்பில் வைத்து தீப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிவாயு சம்பவங்கள் – குழு அறிக்கை இன்று ஜனாதிபதிக்கு

தேர்தலில் மொட்டும் யானையும் சேர்ந்து போட்டியிடுமா?

ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டி – ரிஷாட் பதியுதீன்

editor