உள்நாடு

தங்காலை பழைய சிறைச்சாலை – விசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – பயங்கரவாத மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளமை தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1982ம் ஆண்டு இலக்கம் 10 இன் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்துடன் வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48 இன் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக) ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள பணிகளுக்காக – தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

குறித்த வரத்தமானி அறிவித்தல் கடந்த 4ம் திகதி வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம் )

Related posts

பூஜித் ஜயசுந்தர முன்வைத்த மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி

அரசினுள் ஸ்ரீ.சு.கட்சிக்கு தொடர்ந்தும் பாரபட்சம்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு