உள்நாடு

கப்பலின் தீ பரவல் கட்டுக்குள் – நன்றி தெரிவித்த ஜனாதிபதி

(UTV | கொழும்பு)- கிழக்கு கடற்பரப்பில் MT NEW DIAMOND எண்ணைக் கப்பலில் ஏற்பட்டிருந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து MT New Diamond கப்பலின் தீயை அணைக்க இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் உங்கள் பணியை நான் பெரிதும் பாராட்டுகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு ஜனாதிபதி இவ்வாறு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Related posts

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்

எமக்கு கிடைக்கும் நிதியானது கல்லீரல் பராமரிப்பு நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு