விளையாட்டு

ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் விலகல் – கடும் பயிற்சியில் CSK

(UTV | ஐக்கிய அரபு இராச்சியம்) – சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் 2020 ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் 19 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளது.

சுரேஷ் ரெய்னா சொந்த காரணத்திற்கான ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து விலகு வதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது ஹர்பஜன் சிங் தாம் சொந்த காரணத்திற்கான ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாகவும் தமது குடும்பத்துடன் நேரம் செலவிட எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரச்சினைகள் மேல் பிரச்சினைகளாக வெடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவராக அணியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பரிசோதனையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை என உறுதியானமையை அடுத்து பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.

எவ்வாறாயிம் தொற்று உறுதியான நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இரண்டு வீரர்களுக்கும்; 14 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலைப்பயிற்சியில் அடித்து துவம்சம் செய்யும் தோனியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Related posts

நான்காவது முறையாகவும் ஸ்பெயின் அணி செம்பியன்.

நியுசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி

மீளவும் மேத்யூஸ் களத்தில்