உலகம்

இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மீட்புப் படையினர்

(UTV | லெபனான்) – பெய்ரூட் வெடிப்பு நடைபெற்று கிட்டதட்ட ஒரு மாதமாகிற நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு வெடி விபத்தில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணியாளர்கள் இதயத் துடிப்பை தேடி வருகின்றனர்.

கடந்த புதனன்று(02) பெய்ரூட்டின் மார்க் மிக்கேல் பகுதிக்கு சிலி நாட்டிலிருந்து வந்த மீட்புப் குழுவினர் பணிக்கு வந்தவுடன் அங்கு கூட்டம் கூடியது. ஆனால் யாரேனும் இடிபாடுகளுக்கு மத்தியில் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.

புதன் இரவு, மீட்புப் பணியாளர்கள் ஒரு கட்டடத்தை கடந்து சென்றபோது அவர்களின் நாய் ஒன்று யாரோ அங்கு உயிருடன் இருப்பதுபோல் சமிக்ஞை தந்தது.

மீண்டும் வியாழன் காலை அதே கட்டடத்தின் அருகில் அந்த நாய் அதே சமிக்ஞையை தந்தது. அதன்பிறகு அந்த குழு ஸ்கேன் கருவி மூலம் இதய துடிப்போ அல்லது யாரேனும் மூச்சுவிடுவதோ தெரிகிறதா என தேடினர். இடிபாடுகளை அகற்றும் கருவிகளையும் கொண்டு வந்தனர்.

மீட்புப் பணியாளர்கள் ஏழு குழுக்களாகப் பிரிந்து சிறிய சிறிய துண்டுகளாக இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியாளர்கள் இதயத் துடிப்பு ஏதும் இருந்தால் அதை ஆழமாக கேட்கும் வகையில் அவ்வப்போது கூட்டத்தில் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்கு இடையில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை ஆனால் பலர் நம்பிக்கையுடன் ஒவ்வொரு நிமிடமும் அந்த இடிபாடுகளுக்கு நடுவில் யாராவது உயிர் பிழைத்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related posts

கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் – இதுவரை 636 பேர் பலி

பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு