உள்நாடு

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

(UTV | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள்அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுக்கள்

நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரிக்கு எதிராக மனு

editor

“ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை”