கேளிக்கை

தளபதி 65 படத்தின் தலைப்பு

(UTV | இந்தியா) -ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர்ஹிட்டான ‘தளபதி’ படத்தின் தலைப்பை இந்த படத்துக்கு வைக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இப்படம் குறித்து இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிக்கினார் மனிஷா யாதவ்

பிரபல நடிகையின் உடையை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்! விலை எவ்வளவு தெரியுமா

நித்யா மேனனுக்கு கல்யாணமா?