(UTV | கொழும்பு)- பல்வேறு குற்றச் செயல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 06 கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு-கொச்சிக்கடை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.