உள்நாடு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு)- நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நியாகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வலல்லாவிட்ட, இங்கிரிய, அகலவத்த, ஹொரணை மற்றும் புளத்சிங்ஹள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளநிலையிலேயே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு – அனுரவிற்கு சாதகமான நிலை

editor

இன்றுடன் நிறைவடையும் தபால் சேவை வேலை நிறுத்தம்!

கொரோனா சிகிச்சைக்காக நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை