உலகம்

இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

(UTV | இஸ்ரேல் ) – இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை நேற்று ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த 13 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.

இதனிடையே தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரத்து செய்தது.

அந்த வகையில் வரலாற்று நிகழ்வாக இஸ்ரேலிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமான சேவை நேற்று ஆரம்பமாகியது.

இந்த விமானத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையிலான அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜெரட் குஷ்னர் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும் பயணம் செய்கின்றனர்.

Related posts

சீனாவின் ஒத்துழைப்பினை செயற்கையாக சீர்குலைப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல

தற்போது 75 நாடுகளில் MONKEYPOX

மும்பையில் பாரிய தீ விபத்து – ஒருவர் பலி