விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

(UTV | இங்கிலாந்து ) – 2-வது இருபதுக்கு – 20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1- 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டி20-யில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. .

பாபர் ஆசாம் 56 ஓட்டங்களிலும் பகர் சமான் 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஹபீஸ் அதிரடியாக விளையாடி அணியின் புள்ளியை உயர்த்தினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் 19.1 ஓவரில் 199 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் டேவிட் 36 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

Related posts

மே.இந்திய தீவுகள் அணியுடன் மோதவுள்ள குழாம்

இலங்கை அணியின் 3 வீரர்களுக்கு தற்காலிக தடை

சானியா மிர்சா சாதிப்பாரா?