விளையாட்டு

இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அவர் மட்டுமே – சங்ககார

(UTV|கொழும்பு) – 600 விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அண்மையில் டெஸ்டில் 600 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்ததார்.

மேலும், டெஸ்டில் 600 விக்கெட் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

இதுதொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் எம்.சி.சி. தலைவருமான குமார் சங்ககார கூறியதாவது:-

தற்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் வேகப்பந்து வீரர்கள் யாரும் ஆண்டர்சனின் 600 விக்கெட் சாதனையை முறியடிக்க முடியாது எனவும் அவர் ஒரு கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

அவரது இந்த சாதனையை யாராலும் நெருங்க முடியாது. இதனால் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக அவர் மட்டுமே இருப்பார் என்று கருதுகிறேன் என கூறியுள்ளார்.

Related posts

20க்கு 20 போட்டியில் இலங்கை அணியில் நீக்கப்பட்டுள்ள வீரர்!

டெல்லி கெப்பிடல்சை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சரியாக விளையாட முடியுமா?