கேளிக்கை

கொரோனாவில் இருந்து மீண்ட ஜெனிலியா

(UTV|இந்தியா) – பிரபல நடிகை ஜெனிலியா, கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.

ஆனால், அதே நேரத்தில் இந்த 21 நாட்களும் தனிமையில் இருந்தது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வீடியோ கால்களும், டிஜிட்டல் உலகில் மூழ்குதலும் தனிமையின் கோரமுகத்தைத் தடுத்துவிட முடியாது. என்னுடைய குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. என பதிவிட்டுள்ளார்.

Related posts

அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பு!!

ஏ.ஆர். ரகுமான் இசையில் அனுஷ்காவின் நடிப்பு…

உணவகத் தொழிலில் களமிறங்கும் சோப்ரா