உள்நாடு

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நாடு திரும்பமுடியாமல் இருந்த மேலும் 322 பேர் இன்று(30) அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து எட்டு இலங்கையர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மேலும் 272 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை கட்டாரின் டோஹாவிலிருந்து 42 இலங்கையர்கள் அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சிங்கமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்

டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.310 ஆக உயர்வு

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.