உள்நாடு

ஆனைவிழுந்தான் சம்பவம் – கைதியின் விளக்கமறியல் நீடிப்பு [UPDATE]

(UTV | புத்தளம்) – அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட புத்தளம் – ஆனைவிழுந்தான் ஈரவலய வனப்பகுதியில் இறால் வளர்ப்புக்காக காணி சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகரை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புத்தளம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

+++++++++++++++++++++++++  UPDATE @12:20PM
ஆனைவிழுந்தான் வன அழிப்பு : வர்த்தகர் கைது

அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட புத்தளம் – ஆனைவிழுந்தான் ஈரவலய வனப்பகுதியில் இறால் வளர்ப்புக்காக காணி சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தகர் ஒருவர், ஆராச்சிக்கட்டுவ பொலிசில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிசார் தெரிவித்திருந்தனர்.

குறித்த பகுதியில் காணி சுத்திகரிப்பு பணிக்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இயந்திர வாகனத்துடன் அதன் சாரதி நேற்று(28) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வர்த்தகர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா கவனம்

editor

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor