உள்நாடுவணிகம்

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து வெளியுறவு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பிலான வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 277 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் ஆயிரத்து 90 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கவும், ஏற்றுமதித் துறையில் கொரோனா பரவலின் எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்கவும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 2020ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஏற்றுமதி இலக்காக 10 தசம் 75 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“ஒரு கிராமம் – ஒரு தயாரிப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ், இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு உதவும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க, வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் 351 பேர் கைது

துறைமுக நகர மனுக்கள் : நான்காவது நாளாக இன்றும் விசாரணைக்கு

வரவு செலவுத்திட்டம் 2023 [நேரலை]