உள்நாடு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

(UTV | கொழும்பு) – இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(29) வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின்னர் கட்சியின் முக்கிய பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் வெளியிடப்படுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடுகின்றது.

முன்னதாக, கடந்த 15ம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தமிரழசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில், நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

அது தொடர்பிலும், மத்திய குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக, அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்திருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் கருத்துகள் வெளியாகியிருந்தன.

எனினும், அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போதே தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

Related posts

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு – வர்த்தமானி வௌியானது

editor

சமையல் எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு