கேளிக்கை

சுஷாந்த் இற்காக சுரேஷ்

(UTV | இந்தியா) – அண்மையில் உயிரிழந்த சுசாந்த் சிங் மரண வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுசாந்த் சிங் பற்றி அவர் கூறியதாவது:

“.. சகோதரா, எங்கள் இதயத்தில் எப்போதும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். வேறு எதையும் விடவும் உங்கள் ரசிகர்களுக்குத்தான் இழப்பு அதிகம். நம் அரசு மீதும் அதன் தலைவர்கள் மீதும் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க கடைசி வரை அவர்கள் முயற்சி கொள்வார்கள். நீங்கள் உண்மையான ஊக்கம் அளிப்பவர்..” எனத் தெரிவித்திருந்தார்.

நடிகா் சுசாந்த் சிங், மும்பை பந்த்ரா புகா் பகுதியில் அமைந்துள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14 ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தாா். இந்த வழக்கை துணைக் காவல் ஆணையா் தலைமையிலான மும்பை காவல்துறை குழு விசாரணை நடத்தி வந்தது.

சுசாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடை தந்தை சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுசாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பைக்குக் கடந்த வியாழக்கிழமை வந்த சிபிஐ சிறப்புக் குழு, விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணை அதிகாரிகள், தடயவியல் நிபுணா்கள் ஆகியோரை உள்ளடக்கிய சிபிஐ சிறப்புக் குழு மும்பைக்கு வந்தது. மும்பை காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் வழக்கு தொடா்பான ஆவணங்களின் அடிப்படையில் அந்தக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை

ஒரே நாளில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ரியானா

ஷாருக்கின் பிள்ளைகள் ஐபிஎல் ஏலத்தில்..