உள்நாடு

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி வெளியானது

(UTV|கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் திகதி அறிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதன்படி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

ஜயந்த கெட்டகொட இராஜினாமா