உள்நாடுசூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(28) இரண்டாவது நாளாகவும் விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதிவரையான 4 மாத செலவீனங்களுக்காக ஆயிரத்து 900 பில்லியன் பெறுமதியான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

Related posts

தனக்கு எவ்வித நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லை – ஷாபி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

உயிர்காக்கும் ‘சக்தி’ இலங்கையினை நோக்கி வருகிறது