கேளிக்கை

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் தமன்னா

(UTV|இந்தியா) – இளைய தளபதி விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியிடும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை தமன்னா, விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சுறா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த தமன்னா, தற்போது தளபதி 65 மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Related posts

‘ஜெயம் ரவி, நடிகைகளுக்கு கிடைத்த வரம்’ – சயிஷா

ஆபாச பட நடிகை மரணத்தில் மர்மம்

படப்பிடிப்பில் நடிகை அலியாபட் காயம்