உள்நாடுசூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது [UPDATE]

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை பிரதமரினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

———————————————————————–[UPDATE]

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று

(UTV|கொழும்பு) – பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

இதன்போது இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று(27) ஆரம்பமாகவுள்ளது.

செப்டெம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான 4 மாத காலத்திற்கான அரச செலவீனங்களை ஈடு செய்யும் 1,746 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீது இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இடைக்கால கணக்கறிக்கைக்கான அங்கீகாரம் கிடைக்க பெற்றுள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வை கூடம் பகுதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

வட மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்

editor

இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்

பிரித்தானிய மஹாராணியின் பிறந்தநாளையொட்டி கௌரவிக்கப்படவுள்ள இலங்கையர்