உலகம்

குடியரசுத் தலைவர் தொடர்ந்தும் கோமாவில்

(UTV | இந்தியா) – முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமாவில் இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 10ஆம் திகதியன்று பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, துரையீரல் தொற்றும் உருவாகி உள்ளதால் இப்போது அதற்கான சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

உலக அளவில் 2.50 கோடி பேருக்கு கொரோனா

ஜப்பானின் ஆளும் கட்சியின் தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு

வெளிநாட்டவர்களுக்கு மறு அறிவித்தல் வரை சவூதி அரேபியா தடை