கேளிக்கை

விஜய்யின் சுவாரஷ்யமான தகவலை வெளியிட்ட சஞ்சீவ்

(UTV|இந்தியா)- கொரோனா அறிகுறி காரணமாக வீட்டில் தனிமையில் இருந்ததனது நண்பன் சஞ்சீவுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார்

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சஞ்சீவ் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து சுவாரஷ்யமான தகவல் ஒன்றை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: எனக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தெரிந்தது. அதனால் எனது மனைவி மற்றும் குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தனிமையில் இருந்தேன்.

அப்போது விஜய்யிடமும் இதுபற்றி சொன்னேன். அடுத்த 15 நிமிடத்தில் எனக்காக மதிய உணவு கொண்டு வந்தார் விஜய். எனக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் விஜய்யை நேரில் சென்று பார்க்கவில்லை. எனது வீட்டு செக்யூரிட்டியிடம் அவர் உணவை கொடுத்துவிட்டு சென்றார்” என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

Related posts

சூர்யா படத்தில் ராதிகா

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் விஜய்

கொரோனாவும் பிரபலங்களும் – நிழலாக உலா வரும் ஊடகங்கள்