உள்நாடு

இதுவரையில் 2,819 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 03 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இதுவரையில் 2,819 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,971 ஆக காணப்படுகின்றமை நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 140 நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தெல் பாலாவின் மகள் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்களது தீர்மானம்

மக்களிடம் பலவந்தமாக பணம் வசூலித்த 11 பேர் கைது!