உள்நாடுவணிகம்

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- பிரதான ஏற்றுமதிப் பயிர்களாக கித்துல் மற்றும் பனை உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேங்காய், கித்துல், பனை மற்றும் உற்பத்திகளை ஊக்குவிக்கவும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறைகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போதே குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கித்துல் மற்றும் பனை உற்பத்திகளை ஊக்குவிக்கவும், அவை தொடர்பில் காணப்படும் தடைகளை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், கித்துல் உற்பத்திக்காக புதிய அரச நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பனை மரங்களை வெட்டுவதை தடை செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேங்காய் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்காக தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட இடங்களில் உடனடியாக தேங்காய் உற்பத்தியை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்

இதேவேளை, உள்நாட்டில் இறப்பர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறப்பர் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை

ராஜகுமாரி மரணம் தொடர்பில் மனோவுக்கும், அரசு தரப்பு எம்பிகளுக்குமிடையில் மோதல் (VIDEO)