கேளிக்கை

ஓ.டி.டி தளத்தில் மாஸ்டர்

(UTV|கொழும்பு) – மாஸ்டர் படத்தை வாங்க முன்னணி ஓ.டி.டி தளங்கள் போட்டி போட்டு விலை பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கெளரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகும் தினம் ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, சூரரைப் போற்று படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட உள்ளதாக சூர்யா அறிவித்துள்ள நிலையில், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படமும் அவ்வாறே வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும், மாஸ்டர் படத்தை வாங்க முன்னணி ஓ.டி.டி தளங்கள் போட்டி போட்டு விலை பேசுவதாகவும் கூறப்படுகிறது.

மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாவதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

தீயாக பரவிய அனுஷ்காவின் செய்தி…

‘காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா

பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்