விளையாட்டு

தோனியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வழிநடத்தவில்லை

(UTV | கொழும்பு) – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சரியான பாதையில் வழிநடத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் போட்டியில் இருந்து விடைபெற்ற சந்தர்ப்பத்தில் எந்தவொரு பிரயாவிடை போட்டியிலும் விளையாடாமை வறுத்தமளிப்பதாகவும் சக்லைன் முஷ்டாக் கூறியுள்ளார்.

இதனை அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வீரரும் தமது அணிக்கான ஆடையில் இறுதி போட்டி விளையாட வேண்டுமென எதிர்பார்க்கின்ற நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய ஆடம்பரக் காரை வாங்கிய விராட் கோலி [VIDEO]

ஆசிய கிண்ணம் 2022 : இலங்கை – இந்தியா இன்று களமிறங்குகிறது

இலங்கைக்கு எதிரான நியூஸிலாந்து இருபதுக்கு 20 குழாம் அறிவிப்பு; வில்லியம்சன் நீக்கம்