உலகம்

ஜப்பான் பிரதமர் 2வது முறையாகவும் வைத்தியசாலைக்கு

(UTV | கொழும்பு) – ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று(24) இரண்டாவது முறையாகவும் டோக்கியோ வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கையாள்வதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக அவர் ஜப்பானின் தலைவராக தொடர்ந்து இருப்பதற்கான திறனைப் பற்றி கவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனையைப் பின்தொடர்வதற்காக அபே வைத்தியசாலையில் இருந்தார். அவரது பரிசோதனை 7-1 / 2 மணி நேரம் நீடித்ததாக அந்நாடு அரசாங்க செய்தித் தொடர்பாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

பிரதரம் அலுவலகம் அவரது வைத்தியசாலை வருகைகள் குறித்து விரிவான விளக்கத்தை அளிக்கவில்லை, எனினும் அவரது நெருங்கிய உதவியாளர் சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ, கடந்த வார வருகை ஒரு வழக்கமான சோதனை என்றும் தெரிவித்திருந்தார்.

Related posts

மெக்சிகோ பாடசாலைகளுக்கு பூட்டு

பிரபல பாலிவுட் பாடகர் KK காலமானார்

இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்